2022 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (21:00 IST)
2022 ஆம் ஆண்டிற்கான  பொருளாதாரத்திற்கான  நோபல் பரிசு  3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உலகில் மிக  உயரிய விருதாகக் கருதப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், வேதியல், மருத்தும், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறையில் சிறந்த சாதனை செய்தவர்களுக்கு இந்த விருதை  நோபல் கமிட்டி குழு தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

ஏற்கனவே 2022 ஆம் ஆண்டிறகாக இயற்பியல், மருத்துவம், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்த பங்காற்றியவர்களுக்கு  நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில்  இன்று பொருளாதாரத்திற்கான   நோபல் பரிசு  அமெரிக்காவைச் சேர்ந்த பென் பெர்னாக், டக்லஸ் டைமண்ட், ஃபிலிப் ஹெஸ்டிப்விக் ஆகிய  மூன்று பொருளாதார வல்லு நர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் பற்றிய ஆய்வுக்கான இந்த மூன்று பேருக்கும் பொருளாதாரத்திற்கான   நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்