18 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நாய் கண்டுபிடிப்பு… ஆராய்ச்சியாளர்கள் வியப்பு !

புதன், 27 நவம்பர் 2019 (16:17 IST)
சுமார் 18000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, பனிக்குள்  புதைந்துபோன ஒரு நாயின் உடலை ஆராய்ச்சியாளர்கள் சைபீரியாவில் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியனின் வயதையும், பூமியின் வயதையும் கண்டுபிடித்துள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பல உயிரிங்கள் தோன்றிய ஆண்டுகளையும் வகைப்படுத்தி கூறியுள்ளனர். இன்னும் பூமியில் இருந்து கிடைக்கும் பொருட்கள் குறித்து ஆராய்ச்சி செய்து  முடிவுகளைத் அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சைபீரியா நாட்டில் உள்ள , பனிக்கட்டி உறைவிடத்தில் சுமார் 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்வாழ்ந்த ஒரு நாயின் உடலைக் கண்டெடுத்துள்ளனர்.

இந்த நாயின் உடல் உறைந்த பனியில் முற்றிலும் பாதுகாக்கப்பட்ட்தாக இருந்தூள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த உலகில் கண்டெடுக்கப்பட்ட அதிக வயதுள்ள நாய்களில் அதுதான் முக மூத்த  வயதுடைய நாய் என தெரிவித்துள்ளனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்