பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை முற்றிலும் ஒழிக்க ஒரு மாற்றுப்பொருள் தயார் !!
வெள்ளி, 22 நவம்பர் 2019 (22:13 IST)
உலகமே இன்று பிளாஸ்டிக் குப்பைகளால் நிறைந்திருக்கிறது. ஆயிரம் வருடங்களைக் கடந்தாலும் மக்காத பிளாஸ்டிக்குகளை இந்த பூமிப்பந்தில் நாம் எங்கும் நிரப்பி வைத்திருக்கிறோம்.இதனால், பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் தீமைகளை நாம் ஒவ்வொன்றாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். உலக அளவிலான சூழலியல் விஞ்ஞானிகள், பிளாஸ்டிக் குப்பைகளை அழிப்பது சம்பந்தமாக மூளையைக் கசக்கி யோசித்து வருகிறார்கள்.
பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகளை உணர்ந்த தமிழக அரசும், கடந்த ஜனவரி 1-ம் தேதியில் இருந்து தமிழகத்தில் குறிப்பிட்ட மக்காத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்தது. ஆனாலும், நம்மில் பலர் பிளாஸ்டிக் புட்டிகளில் அடைக்கப்பட்ட தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை வாங்கி அருந்தி கொண்டுதான் இருக்கிறோம்.
இந்நிலையில்தான், கரூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் ரிதன்யா மற்றும் ஹேமஸ்ரீ என்ற இரண்டு மாணவிகள், மூங்கிலில் பாட்டில் செய்து, 'பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்று' என்கிற தலைப்பில் தென்னிந்திய அளவில் கலக்கியுள்ளனர்.
கரூர் சின்னாண்டங்கோயில் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வழிகாட்டுதல் ஆசிரியர் ராஜசேகரன் முயற்சியாலும், 8 வது படிக்கும் மாணவி ரிதன்யா மற்றும் ஹேமஸ்ரீ ஆகியோரின் முயற்சியால் சமுதாயத்திற்கு நன்மை தரும் மூங்கில் குடுவைகள் தான் ஏனென்றால், எங்களை விட சிறியவர்களும், பெரியவர்களும் அனைவரும் தண்ணீர் அருந்துவதற்கும் வெளியூர் செல்வதற்கு செல்லும் போது கூட பிளாஸ்டிக் பாட்டிலில் தான் குடிநீர் பாட்டிலில் கொண்டு செல்கின்றனர்.
ஆகவே தான் மூங்கில் ஒரு நல்ல மாற்று தரும் குடுவையாக எங்களுக்கு இருந்தது, ஆகையால் இந்த மூங்கில் குடுவையில் தண்ணீர் அருந்துவதினால், இதயத்திற்கும் நல்லது என்றும், புற்றுநோயினை கட்டுப்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன, மேலும் தோல்வியாதிகள் உள்ளிட்டவைகளும் சரியாகின்றன. ஆகையால் தண்ணீரை சேகரித்து வைக்கும் ஒரு குடுவையாக நாம் பார்க்காமல், பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் குடிநீர் குடிப்பதினால் ஏற்படும் தீமைகளை விட, இந்த மூங்கில் குடுவையில் தண்ணீர் குடிப்பதினால் புற்றுநோயினை தடுப்பதோடு, செரிமானம் மற்றும் உடல் எடையை குறைக்கின்றது.
மேலும், இந்த மூங்கில் குடுவை அதிகளவில் நாம் உபயோகிக்க முன்வரவேண்டுமென்றதோடு., பல்வேறு நோய்களையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட இந்த மூங்கில் குடுவையில் தண்ணீர் அருந்தினால் தான் பிளாஸ்டிக் குடுவையில் தண்ணீர் என்பதை மாற்ற முடியும் என்றும் இந்த ப்ராஜெட்டினை கையில் எடுத்த மாணவிகளில் ஒருவரான 8 ம் வகுப்பு மாணவி ரிதன்யா தெரிவிக்கின்றார்.
மேலும், இதை தொடர்ந்து, ஒவிய ஆசிரியர் கார்த்திகேயன் தெரிவிக்கையில், சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது இந்த பிளாஸ்டிக், அதுமட்டுமில்லாமல், பிளாஸ்டிக் குடுவையில் தண்ணீர் குடிப்பது தான் மிக, மிக அதிகரித்து வரும் நிலையில், அதற்கு மாற்றாக தான் இந்த மூங்கில் குடுவை தண்ணீர், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதும் கூட, அதிகளவில் ஆக்ஸிஜன் அதிகம் கொடுக்கும் தாவரம்,. தென்னிந்திய அளவில் உள்ள விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக மூங்கில் சாகுபடி விளைச்சல் அமையும், மேலும், வடமாநிலம் பகுதியில் அஸ்ஸாமில் இந்த மூங்கில் குடுவை பற்றிய ஒரு விழிப்புணர்வு நமது தமிழகத்தில் இல்லை என்பது தான் மிக மிக வேதனையும் கூட என்ற அவர், தென்னிந்திய அளவில் மட்டுமில்லாமல், தமிழகத்தில் ஏராளமானோர் இனி மூங்கில் குடுவையில் தான் தண்ணீர் குடிக்க வைப்பது தான் எங்கள் லட்சியம் என்றதோடு, பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிலை அறவே ஒழிக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.