எல்லை தொடர்பாக பழங்குடியினர் இடையே மோதல் -16 பேர் பலி

செவ்வாய், 16 மே 2023 (23:05 IST)
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள தர்ரா ஆடம் கெஜ் பகுதியில் சில ஆண்டுகளாக,  நிலக்கரிச் சுரங்கம் எல்லை தொடர்பாக சன்னிகேல் மற்றும் ஜர்குன் கெஸ் ஆகிய இரு பழங்குடியினர் இடையே மோதல் இருந்து வருகிறது.

இரு பழங்குடியினர் மோதல் அடிக்கடி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் இவர்களுக்கு இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டதில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதில், 16 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், இருதரப்பினர் இடையேயான மோதலை நிறுத்தினர்.

சண்டையில் காயமடைந்தவர்களை மீட்டு பெஷாவரில் உள்ள  மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது இப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்