அரசை எதிர்த்த 13,000 பேருக்கு தூக்கு: சிரியாவில் கொடூர தண்டனை!!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2017 (11:12 IST)
சிரிய நாட்டு சிறை ஒன்றில் கடந்த ஐந்து வருடங்களில் 13,000 பேர் தூக்கிலிடப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை ஆய்வில் தெரிவித்திருக்கிறது.


 
 
சிரியாவில் டமாஸ்கஸ் அருகே இருக்கும் சிறையில் 2011 முதல் 2015 வரை 13,000 பேர் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளது.

காவலர்கள், கைதிகள், நீதிபதிகள் என 84 சாட்சியங்களிடம் எடுக்கப்பட்ட பேட்டியை அடிப்படையாக வைத்து இந்த அறிக்கையை சர்வதேச மன்னிப்பு சபை  தயாரித்துள்ளது.
 
2011 முதல் 2015 வரை, ஒவ்வொரு வாரமும் 50 பேரின் குழு, சிறை செல்களிலிருந்து கொண்டு செல்லப்பட்டு, துன்புறுத்தப்பட்டு மிக ரகசியமாக நடு இரவில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
 
இப்படி கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் அதிபர் பஷார் அல்-அசாத்தின் அரசை எதிர்த்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்