11 லட்சம் காலாவதியான தடுப்பூசிகள்: மொத்தமாக அழிக்க உத்தரவு!

செவ்வாய், 3 மே 2022 (12:08 IST)
11 லட்சம் தடுப்பூசிகள் காலாவதி ஆகி விட்டதாகவும் அதனை அடுத்து அவை அனைத்தையும் மொத்தமாக அழிக்க டென்மார்க் அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த நிலையில் பல நாடுகளிலிருந்து தடுப்பூசிகளை டென்மார்க் அரசு  இறக்குமதி செய்தது
 
 இந்த நிலையில் தற்போது இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் 11 லட்சம் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது
 
இதனை அடுத்து அனைத்து தடுப்பூசிகளையும் அழிக்க டென்மார்க் அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
டென்மார்க் நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிக அளவாக குறைந்துவிட்டது என்றும் அங்கு உள்ள 90% க்கும் மேற்பட்ட மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்