1 மணி நேரத்தில் 22.5 கி.மீ சைக்கிள் ஓட்டிய 105வயது முதியவர்

வியாழன், 5 ஜனவரி 2017 (14:21 IST)
பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த 105 வயது முதியவர் 1 மணி நேரத்தில் 22.5 கி.மீ தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார்.


 

 
பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த ராபர்ட் மர்சாண்ட்(105) 1 மணி நேரத்தில் 22.5 கி.மீ தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். இவர் தனது 40 வயதில் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் செலுத்தியுள்ளார். அப்போது முதல் சைக்கிள் ஓட்டுவதில் மிகவும் ஆர்வம் கொண்டு தொடர்ந்து பல சாதனைகள் படைத்துள்ளார்.
 
சாதனைக்கு வயது இல்லை என்பதை நிரூபித்து வருகிறார். இவர் தனது 102 வயதில் 26.9 கி.மீ தூரம் சைக்கிள் ஓட்டியுள்ளார். 100வது வயதில் 4 மணி 27 நிமிடத்தில் 100 கி,மீ தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். இதற்காக 6 மாதம் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
 
தொடர்ந்து சாதனைகள் படைத்து, சாதனைக்கு வயது முக்கியமில்லை என்பதை நிரூபித்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்