விஷ வாயு தாக்கி 1000 பள்ளி குழந்தைகள் மயக்கம் - டெல்லியில் அதிர்ச்சி

Webdunia
சனி, 6 மே 2017 (10:21 IST)
விஷ வாயு காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் மயக்கமடைந்த சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


 

 
டெல்லியில் துல்லக்பாத் என்ற பகுதியில் விடுதியுடன் கூடிய ஒரு பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலை அந்த பள்ளியின் வழியாக எரிவாயுவை ஏற்றி வந்த ஒரு கண்டெய்னர் லாரியிலிருந்து வாயு கசிந்து வெளியானது. இந்த வாயு பள்ளி முழுவதும் பரவியது. 
 
இதில், அந்த பள்ளியில் படித்து வரும் 1000த்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மயக்கமடைந்தனர். ஏராளமான குழந்தைகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக 30 ஆம்புலன்சுகள் வண்டிகள் வரவழைக்கப்பட்டு, பள்ளிக்குழந்தைகளை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். 
 
இதுபற்றி கேள்விபட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து பள்ளிக்கு விரைந்து வந்தனர். ஏராளமானோர் அங்கு கூடியதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்ட்டுள்ளது. இதனால், ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்