கடந்த எட்டு ஆண்டுகளில் இதுபோன்ற வறட்சியைச் சந்தித்ததில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். இது பற்றிக் கருத்துக் கூறுகையில், ”தண்ணீரின்றி எங்கள் குழந்தைகள் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது. ஆனால் அரசு இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. பொறுப்பில் உள்ள அனைவரிடமும புகார் அளித்து விட்டோம். ஆனால் இதுவரையில் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று சொல்கின்றனர்.
போராட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ள ஒருவர் பேசுகையில், ”தண்ணீர் கொண்டு வரும் வண்டிகள் எப்போதாவதுதான் வருகின்றன. இதனால் தண்ணீர் பிடிக்க மக்களுக்கிடையில் சண்டை ஏற்படுகிறது. தண்ணீருக்காக யாரையாவது ஒருவர் கொலை செய்து விட்டாலும் ஆச்சரியமில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்.