நவாஸ் ஷெரீப் மீது காலணி வீச்சு: பாகிஸ்தானில் பரபரப்பு
திங்கள், 12 மார்ச் 2018 (12:18 IST)
ஊழல் வழக்கில் பதவியிழந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் நவாஸ் ஷெரிப் மீது மர்ம நபர் ஒருவர் காலணி வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப் பனாமா பேப்ரஸ் விவகாரத்தில் தண்டிக்கப்பட்டு அதிபர் பதவியை இழந்தார். இவர் நேற்று லாகூரில் உள்ள மதராசாவில் நடந்த கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சியின் மேடையில் அவர் மைக்கை பிடித்து பேச முற்பட்ட போது பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த மர்ம நபர் ஒருவர் அவர் மீது காலணியை வீசினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், இது தொடர்பாக அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர், அந்த விசாரணையில் அவன் நிகழ்ச்சி நடைபெற்ற கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் என்பது தெரியவந்துள்ளது.