டி20 ஐபிஎல் நடத்தை விதிகளை மீறல்: சிக்கலில் டெல்லி கேபிட்டல்ஸ்!

சனி, 23 ஏப்ரல் 2022 (13:05 IST)
டி20 ஐபிஎல் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

 
நேற்று நடந்த ஆட்டத்தின் இறுதி ஓவரில், 223 ரன்களை எடுக்க டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் மூன்றாவது பந்தில், ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஓபேட் மெக்காய் பந்து வீச்சில் ஃபுல் டாஸ் வீசினார். ரோவ்மேன் பவல் அதை சிக்ஸருக்கு அடித்தார். இருப்பினும், டெல்லி கேபிடல்ஸ் அணி நோ பால் என்று நினைத்தது சைகை செய்ய தொடங்கினர்.
 
அதன் பிறகு பந்த் இரண்டு பேட்டர்களான பவல் மற்றும் குல்தீப் யாதவை களத்தை விட்டு வெளியேறுமாறு சைகை காட்டுவதை காண முடிந்தது. பின்னர் ஆன் பீல்ட் நடுவர் நிதின் மேனனிடம் பேசுவதற்காக ஆம்ரே களத்தில் இறங்கினார். இது களத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் டி20 ஐபிஎல் போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன்  ரிஷப் பந்த்-க்கு போட்டி கட்டணத்தில் 100% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல டெல்லி அணியின் வீரர் ஷர்துல் தாக்கூருக்கு போட்டி கட்டணத்தில் 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி அணியின் உதவிப் பயிற்சியாளர் பிரவின் ஆம்ரேவுக்கு போட்டிக் கட்டணத்தில் 100% அபராதம் மற்றும் ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்