டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ படத்திற்கு சவுதியில் தடை: என்ன காரணம்?

சனி, 23 ஏப்ரல் 2022 (18:55 IST)
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ படத்திற்கு சவுதியில் தடை: என்ன காரணம்?
ஹாலிவுட் திரைப்படம் 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’  திரைப்படத்திற்கும் சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
 
மார்வெல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டி வெர்ஸ் ஆப் மேட்னஸ்’  திரைப்படம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் மே 6ஆம் தேதி வெளியாக உள்ளது.
 
ஹாலிவுட் பிரபல இயக்குநர் சேம் ரைமி இயக்கிய இந்த படத்தில் பெனெடிக்ட் கும்பர்பேட்ச், எலிசபெத் ஓல்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில்  இந்த படத்தை சவுதி அரேபிய அரசு தடை செய்துள்ளது.
 
இந்த படத்தில் ஒசித்தல் கோமேஸ் என்ற நடிகரின் கேரக்டர் தன்பால் ஈர்ப்பாளராக காட்டப்பட்டுள்ளதால் சவுதி அரேபிய தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்