கே.எல்.ராகுல் விளையாட தடை?

திங்கள், 25 ஏப்ரல் 2022 (11:02 IST)
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் நேற்று போட்டியின் போது ஸ்லோ ஓவர் ரேட் விவகாரத்தினால் ராகுல் ரூ. 24 லட்சத்தை செலுத்த வேண்டியிருக்கும். 

 
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்: 
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்திருந்தது.
 
இதனை அடுத்து 169 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இது லக்னோ அணி பெறும் 5வது வெற்றியாகும். மும்பை அணி தொடர்ந்து 8வது தோல்வியை சந்தித்துள்ளது.
 
கேப்டன் கே.எல்.ராகுல் புது சாதனை: 
ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த இந்தியர்கள் பட்டியலில் முதலில் இருந்த ரோகித் சர்மா சாதனையை லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் நேற்றைய போட்டியில் சமன் செய்தார். இருவரும் தலா 6 சதங்கள் அடித்துள்ளனர்.
 
இவர்களைத் தொடர்ந்து விராட் கோலி 5 சதமும், சுரேஷ் ரெய்னா 4 சதமும் அடித்துள்ளனர். நேற்றைய போட்டியில் கேப்டன் கே.எல்.ராகுல் 62 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கே.எல்.ராகுல் விளையாட தடை?
நேற்று போட்டியின் போது ஸ்லோ ஓவர் ரேட் விவகாரத்தினால் ராகுல் ரூ. 24 லட்சத்தை செலுத்த வேண்டியிருக்கும். இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் இரண்டாவது ஓவர் ரேட் மீறல் இதுவாகும். மேலும், மூன்றாவது முறையாக குற்றத்தை மீண்டும் செய்தால், கேப்டன் ராகுலுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்படும், அதோடு ஐபிஎல் விதிகளின் படி ஒரு போட்டி இடைநீக்கமும் வழங்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்