சுவை மிகுந்த பன்னீர் டிக்கா செய்யவேண்டுமா...?

தேவையான பொருள்கள்:
 
கெட்டித்தயிர் - 1/2 கப் 
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் 
தனியாத்தூள் - 1 ஸ்பூன் 
கரம் மசாலாத்தூள் - 1 ஸ்பூன் 
கஸ்தூரி மேத்தி - சிறிதளவு 
சாட் மசாலாத்தூள் - 1/2 ஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு 
மிளகாய்த்தூள் - தேவையான அளவு 
இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு 
கடுகு எண்ணெய் - 1 ஸ்பூன் 
சீரகத்தூள் - 1 ஸ்பூன் 
ஓமம் - 1/4 ஸ்பூன் 
லெமன் ஜூஸ் - 1 ஸ்பூன் 
கடலை மாவு - 2 ஸ்பூன் 
வெண்ணெய் - 2 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
வெங்காயம் - 2 
குடைமிளகாய் - 1/2 துண்டு. 
 
டிக்கா செய்ய: 
 
பன்னீர் - 250 கிராம் 
எண்ணெய் - 1 ஸ்பூன் 
வுட்டன் ஸ்க்யூவர் - 3 
கரித்துண்டு - 1 
நெய் - 1/2 ஸ்பூன் 
எண்ணெய் - 5 ஸ்பூன்.

செய்முறை: 
 
முதலில் பன்னீர், வெங்காயம், குடைமிளகாயை போன்றவையை தேவையான அளவில் நறுக்கி கொள்ளவும். ஒரு பக்கம் வுட்டன் ஸ்க்யூவரை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பிறகு ஒரு கடாயை எடுத்து அதில் வெண்ணெய், ஓமம், கடலை மாவு ஆகியவை சேர்த்து கிளறி கொள்ளவும். 
 
பின்னர் இந்த கலவையில் தயிர் சேர்த்து மேரினேட் செய்ய தேவையான பொருள்களில் கொடுக்கபட்ட அனைத்துப் பொருட்களையும் சேர்த்து கொள்ளவும்.  கடைசியில் கடுகு எண்ணெயை சூடாக்கி அதில் ஊற்றி எல்லாவற்றையும் ஒன்றுடன் ஒன்று நன்கு கலக்கும்படி கிளறி கொள்ளவும். 
 
இந்த கலவையில் நறுக்கி வைத்த பன்னீர் துண்டுகள், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ளவும். அடுத்து ஸ்க்யூவரில் பன்னீர், வெங்காயம்,  குடைமிளகாய் என ஒன்றன் பின் ஒன்றாக சொருகி டிக்காக்களை ரெடி செய்து கொள்ளவும். 
 
தோசைக்கல் சூடான பிறகு அதில் டிக்காவை வைத்து வேக வைக்கவும். ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் கரி துண்டு மற்றும் நெய்யை ஊற்றி கொண்டு நடுவில்  வைத்து கொள்ளவும். பிறகு டிக்காவை ஒரு மூடி போட்டு மூடவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்