செய்முறை:
கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை கொள்ளுவை வேகவைத்து எடுக்கவும் வேகவைத்த கொள்ளு, வரமிளகாய், தனியா, சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும். வேண்டுமானால் வேகவைத்த தண்ணீர் சேர்க்கலாம்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து வதக்கி புளி தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும். மேலே கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த கொள்ளு ரசம் தயார்.