செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய 200 கிராம் பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். இப்போது பன்னீர் புலாவ் செய்ய அடுப்பில் ஒரு பிரஷர் குக்கரை வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் இரண்டு ஸ்பூன் நெய், இரண்டு பட்டை, 3 ஏலக்காய், இரண்டு கிராம்பு, ஒரு பிரியாணி இலை, சிறிதளவு மிளகு, பொடிதாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் மற்றும் 4 கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் அவற்றில் 1/2 கப் நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, ஒரு ஸ்பூன் கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்க வேண்டும். காய்கறிகள் அனைத்தும் நன்றாக வதங்கியதும் ஒரு கையளவு புதினா, கொத்தமல்லி மற்றும் வறுத்து வைத்துள்ள பன்னீர் ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும்.
பின்பு பாஸ்மதி அரிசியை இவற்றில் சேர்த்து சில நிமிடங்கள் மெதுவாக வதக்கிவிடவும். பின்பு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி ஒரு முறை கிளறிவிட்டு. பிரஷர் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வைத்திருந்து, பின்பு அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். இப்பொழுது சுவையான பன்னீர் புலாவ் தயார்.