முதலில் காளானை சிறிதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் கடுகை போடுங்கள் கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாயை போடுங்கள்.
கூடவே நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்றாக வதங்கும் வரை கிளறி விடுங்கள்.வெங்காயம் வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்குங்கள். ஒரு 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து விடுங்கள். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மசாலா பொடிகள், மில பொடி, சீரக தூள், ஜீரக பொடி இவைகளை போட்டு நன்றாக வதக்குங்கள்.
மசாலா சிறிது வதங்கியதும் நறுக்கி வைத்திருக்கும் காளானை போட்டு நன்கு வதக்கி, 5 நிமிடங்கள் வேகவிடுங்கள். அவ்வளவுதான் அருமையான காளான் தொக்கு தயார். இவை சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி, சாதம், இடியப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.