எளிமையான சுவையான குடைமிளகாய் கிரேவி செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
குடைமிளகாய் - 2
பெ.வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 6
தேங்காய்த்துருவல் - கால் கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
 

செய்முறை:
 
குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். முந்திரி பருப்பை சிறிது நேரம் நீரில் ஊறவைத்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் சீரகத்தை போட்டு தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கவும். அதில் தக்காளி, இஞ்சி,  பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
 
தக்காளி குழைய வதங்கிய பின்னர் குடை மிளகாய், தனியா தூள், மிளகாய் தூள், முந்திரி பருப்பு விழுது, உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக கொட்டவும். அவை அனைத்தும் கலந்து நன்கு வெந்ததும் கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்