சூப்பரான சுவையில் கோதுமை அல்வா செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
சம்பா கோதுமை - ஒரு கப்
சர்க்கரை - இரண்டரை கப்
நெய் - அரை கப்
எண்ணெய் - கால் கப்
எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
கேசரி பவுடர் - 2 சிட்டிகை
முந்திரி, பாதாம் - தேவையான அளவு
பிஸ்தா துண்டுகளின் கலவை - தேவையான அளவு,
வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்
பாதாம் எசன்ஸ் - சில சொட்டுகள்.
 
செய்முறை:
 
கோதுமையைக் கழுவி முதல் நாள் இரவே நீரில் ஊறவைக்கவும். மறுநாள் நீரை வடித்து, கிரைண்டர் அல்லது மிக்ஸியில் சேர்த்து சிறிது சிறிதாக நீர் விட்டு  நன்றாக அரைக்கவும்.
 
இதை எடுத்து சிறு கண்ணுள்ள வடிதட்டியில் போட்டு கரண்டியால் அழுத்தி பாலை வடிக்கவும். மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து பாலை வடிகட்டவும். இது  போல் மூன்று நான்கு முறை பாலை வடித்து எடுத்து, இரண்டு மணி நேரம் தனியாக வைக்கவும். பாலின் மேலாக நீர் தெளிந்திருக்கும். இதை பால் சிதறாமல் வடிகட்டவும். மீண்டும் அரை மணி நேரம் வைத்திருந்து, மேலே தெளியும் நீரை வடித்துவிடவும்.
 
முந்திரி, பாதாம், பிஸ்தா துண்டுகளின் கலவையை சிறிதளவு நெய்யில் வறுத்தெடுக்கவும். எண்ணெய் - நெய்யைக் கலந்து கொள்ளவும். 
 
நான்ஸ்டிக் கடாயில் சர்க்கரை, கோதுமைப்பால், ஒரு கரண்டி எண்ணெய் - நெய் கலவை சேர்த்துக் கிளறவும். கோதுமைப்பால் கெட்டியாக வரும்போது மீண்டும் எண்ணெய் - நெய் கலவை சேர்த்துக் கிளறவும்.
 
கோதுமைப் பால் கெட்டியாகி கடாயில் ஒட்டாமல் வரும்போது, சிறிதளவு தண்ணீரில் கரைத்த கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் பிரிந்து வரும் வரை கிளறவும். முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறி, அல்வா கையில் ஒட்டாமல் உருண்டு வரும்போது அடுப்பை  அணைக்கவும்.
 
நெய் தடவிய தட்டில் பரப்பி ஆறிய பிறகு துண்டுகளாக்கியோ பரிமாறவும். சூப்பரான சுவையில் கோதுமை அல்வா தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்