கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டேபிள் ஸ்பூன்
தனியா (மல்லி), சீரகம் - தலா ஒரு டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - கால் டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8
தாளிக்க தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2 மற்றும் கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
தோலுரித்த இஞ்சியை நறுக்கி, எண்ணெயில் வதக்கவும். சிறிது வதங்கியதும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கித் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். எலுமிச்சைப்பழ அளவு புளியை, வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும்.
வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தனியா, சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். இதில் காய்ந்த மிளகாயைச் சேர்த்து வதக்கி, ஆறவிட்டு, பின் மிக்ஸியில் பொடி செய்து, முன்பு வதக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து அரைக்கவும்.
இதில் ஊறிய புளி, 4 டேபிள்ஸ்பூன் அளவு வெல்லம் சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி அரைக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
பிறகு வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள இஞ்சித் துவையலில் சேர்த்து நன்கு கிளறிவிடவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த இஞ்சி துவையல் தயார்.