குடும்ப தலைவிகளுக்கான பயனுள்ள வீட்டு குறிப்புகள் !!

வெயில் காலத்தில் இட்லிமாவு சீக்கிரமே புளிக்காமல் இருக்க, இட்லிக்கு உளுந்து அரைக்கும்போதே ஐஸ் கட்டிகளை சேர்த்து அரைத்தால் மாவு சீக்கிரம் புளிக்காது.  இட்லியும் பூப்போல் இருக்கும்.

ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது. மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்த வேண்டும்.
 
பாகற்காய், வாழைத் தண்டு, வாழைப்பூ இவற்றை முதலில் களைந்த அரிசித் தண்ணீரில் 15 நிமிடம் போட்டு வைக்கவும். பிறகு வேறு தண்ணீரில் அலசிவிட்டு சமைத்தால், கசப்பு குறையும்.
 
பிரெட் மற்றும் பாக்கிங் உணவு வைக்கும்போது அதிக அளவில் உப்பு மறைந்திருப்பதால், இதில் சமைக்கும்போது உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
 
கருணைக்கிழங்கை வேகவைக்கும்போது கொஞ்சம் புளி இலைகளையும் சேர்த்துக்கொண்டால் கிழங்கின் அரிக்கும் தன்மையை இது எடுத்துவிடும்.
 
மாங்காய் சீசனில் குழம்பு, கூட்டு செய்யும்போது புளிக்குப் பதிலாக மாங்காய் சேர்க்கலாம். இது புது மாதிரியான புளிப்பு சுவையை ருசிக்க வைக்கும்.
 
பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு கேரட்டையும் சேர்த்து போட்டால் குழம்பில் கசப்பு மிகவும் குறையும்.
 
வடை தட்டும்போது உள்ளே ஒரு பன்னீர் துண்டை வைத்து மாவால் மூடி எண்ணெய்யில் போட்டுப் பொரித்து எடுத்தால், வடை வித்தியாசமான சுவையுடன்  இருக்கும்.
 
புளிப்பில்லாத மாங்காய்களை தோல் சீவி வேகவைத்து சர்க்கரைப் பாகுடன் அடுப்பில் வைத்து கிளறி காமாகச் செய்து சாப்பிடலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்