சுவை மிகுந்த லட்டு செய்ய !!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கடலைமாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 3 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - சிறிதளவு
உடைத்த முந்திரி - சிறிதளவு
உலர்திராட்சை - சிறிதளவு
எண்ணெய் - பூந்தி செய்ய
பூந்தி கரண்டி
 
செய்முறை:
 
.கடலைமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைக்கவும். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
 
எண்ணெய் நன்கு காய்ந்ததும் பூந்தி கரண்டியை எண்ணெய் மேலாகப் பிடித்து சிறிதளவு கடலைமாவு கலவையை அதில் ஊற்றி பூந்திகளைப் பொரித்தெடுக்கவும். மற்றொரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். 
 
நெய்யில் முந்திரி, உலர்திராட்சை யைப்பொரித்து நெய்யுடன் ஏலக்காய் சேர்த்து பாகில் கலக்கவும். பூந்தியைப் பாகுடன்(சூடாக இருக்கும் போதே) ஒன்று சேர்க்கவும். கையில் நெய்யைத் தடவிக் கொண்டு கை பொறுக்கும் சூட்டிலேயே லட்டுகளாக உருண்டைகள் பிடித்துப் பரிமாறவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்