சுவையான இனிப்பு மற்றும் கார குழி பணியாரம் செய்ய....!

தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி, புழுங்கலரிசி - தலா ஒரு கப், உளுந்து - அரை கப், ஜவ்வரிசி - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, பச்சை  மிளகாய் - 3, கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு,  எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.
செய்முறை: 
 
பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து நைஸாக அரைக்கவும். அரைக்கும்போது, 10 நிமிடம் ஊற வைத்த ஜவ்வரிசியை மாவுடன் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்துக் கலக்கி, 5 மணி நேரம் புளிக்கவிடவும். 

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து,  வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். குழி பணியார சட்டியை சூடாக்கி, சிறிது எண்ணெய்  விட்டு, மாவை குழிகளில் ஊற்றி, இருபுறமும் வேகவிட்டு எடுத்தால், சுவையான குழிபணியாரம் தயார்.
 
இனிப்பு: பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற விடவும். 2 மணி நேரம் கழித்து நைஸாகவும்,  கெட்டியாகவும் அரைத்து எடுக்கவும். இந்த மாவில் கொஞ்சம் வெல்லம் பாகு எடுத்து வடித்து அதனை மாவி சேர்த்து இனிப்பு பணியாரம் செய்யலாம். இதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்து செய்வதால், நல்ல வாசனையுடன் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்