சுவை மிகுந்த சில்லி பன்னீர் செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
பன்னீர் - 200 கிராம்
வெங்காயம் - 1
குடை மிளகாய்  - 1
பூண்டு - 6
இஞ்சி - சிறு துண்டு
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை  - 1 தேக்கரண்டி
அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்)
தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
கிரீன் சில்லி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
சோயா சாஸ் - 2 மேஜைக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
வெங்காய தாள் - ஒரு கைப்பிடியளவு
 
பொரிக்க தேவையான பொருள்கள்:
 
மைதா/ பச்சரிசி - 3 மேஜைக்கரண்டி
சோள மாவு - 6 மேஜைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
சர்க்கரை  - ½தேக்கரண்டி
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி(பொரிக்க)
செய்முறை: 
 
பன்னீரை சூடான நீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். மைதா மற்றும் சோள மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். மிளகு தூள், உப்பு, சிறிது சோயா சாஸ்மற்றும் சர்க்கரை சேர்க்கவும். தேவையான அளவு நீர் சேர்த்து லேசாக கெட்டியான கலவையாக நன்கு  பிசையவும். அதனுடன் பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.


 
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பன்னீர் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். 
 
பின்பு ஒரு பத்திரத்தில் தக்காளி சாஸ், சோயா சாஸ், வினிகர், கிரீன் சில்லி சாஸ், ரெட் சில்லி சாஸ் சேக்கவும். நன்கு கலக்கி தனியே  வைக்கவும்.
 
பன்னீர் பொரித்து மீதமுள்ள எண்ணெயில் பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின்பு வெங்காயம் மற்றும் குடை மிளகாய்,  சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும். மிளகாய் தூள் சேர்க்கவும். பிறகு சாஸ் கலவை சேர்த்து நன்கு கலந்து, பின்பு பொரித்த  பன்னீர், வெங்காயத்தாள் சேர்த்தால் சுவையான் சில்லி பன்னீர் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்