முதலில் புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள், பூண்டு சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், தூதுவளை இலைகள் சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் இதனுடன் புளிக்கரைசல் ஊற்றி, ஒரு கொதிவிடவும். பிறகு, மிளகு - சீரகத்தூள், பருப்புத் தண்ணீர் சேர்த்து நுரைத்து வரும்போது இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவேண்டும். ஆரோக்கியம் நிறைந்த தூதுவளை ரசம் தயார்.