கோதுமை மாவில் சுவையான போண்டா செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
கோதுமை மாவு - 1 கப் 
அரிசி மாவு - 1/2 கப் 
உப்பு - தேவையான அளவு 
தயிர் - 1 கப் 
பெரிய வெங்காயம் - (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கருவேப்பிலை - சிறிதளவு 
கொத்தமல்லி - சிறிதளவு 
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: 
 
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு 1 கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். கோதுமை மாவுடன் 1/2 கப் அரிசி மாவு சிறிதளவு உப்பு சேர்த்த பிறகு 1 கப் அளவிற்கு  தயிர் எடுத்து சேர்க்கவும்.

பிறகு பெரிய வெங்காயத்தை நறுக்கி, அதனை நன்றாக உதிர்த்து விட்டு சேர்க்கவும். அடுத்து நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும்.
 
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவேண்டும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து போண்டா பதத்திற்கு வரும்  வரை மாவை தயார் செய்துக்கொள்ளவும். தயார் செய்த மாவை 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்த பிறகு 1 மணிநேரம் ஊறவைத்த மாவினை எடுத்து, எண்ணெய்யில் மாவினை சிறிய சிறிய உருண்டையாக போடவும். 

எண்ணெய்யில் போட்டதும் 20 நிமிடம் கழித்துபோண்டாவை திருப்பிவிட வேண்டும். நன்றாக வெந்தபிறகு போண்டாவை எடுத்துவிடலாம். சுவையான கோதுமை மாவு போண்டா தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்