சுவையான சில்லி சப்பாத்தி செய்ய !!

சனி, 20 ஆகஸ்ட் 2022 (14:26 IST)
தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 4
வெங்காயம் - 2
தக்காளி - 2
குடைமிளகாய் - ஒன்று (சிறியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - ஒன்று
தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
முட்டை - 2



செய்முறை:

சப்பாத்திகளை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, லவங்கம், பட்டை தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கியதும் தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

குடைமிளகாய் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றுடன் நறுக்கிய சப்பாத்திகளை சேர்த்து வதக்கவும்.

சப்பாத்தியுடன் மசாலா நன்கு சேர்ந்து வந்ததும் முட்டையை உடைத்து ஊற்றவும். முட்டை வெந்து கலவையுடன் ஒன்றாக ஆனதும் கறிவேப்பிலை சேர்த்து பிரட்டி இறக்கவும். சுவையான சில்லி கொத்து சப்பாத்தி தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்