கடைகளின் வியாபாரம் செழிக்க வாஸ்து வழிமுறைகள் !!

Webdunia
கிழக்கு பார்த்த கடை: தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும். காசாளர் தென்கிழக்கு மூலையில் வடக்கு பார்த்து அமர்ந்திருக்க வேண்டும். 

பணபெட்டி காசாளரின் இடது பக்கள் இருக்க வேண்டும். தென் கிழக்கு மூலையில் கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி காசாளரின் வலது புறம் இருக்கவேண்டும். காசாளர் வடகிழக்கு வட மேற்கு ஆகிய இரடு திசைகளிலும் அமரக் கூடாது.
 
தெற்கு பார்த்த கடை:
வடகிழக்கு மூலையை நோக்கி தாழ்வாக தரை அமைக்க வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமரவேண்டும்.  அவருடைய வலதுபுறம் பண பெட்டி இருக்க வேண்டும். வடக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டி இடதுபுறம் இருக்க வேண்டும். தென் கிழக்கு அல்லது வட மேற்கு  மூலையில் அமரக் கூடாது.
 
மேற்கு பார்த்த கடை:
வடகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் வடக்கு பார்த்து அமர வேண்டும். அவரது இடது கை புறம் பண  பெட்டியை வைக்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது வலது புறம் அமைய வேண்டும் வடமேற்கு மூலையிலோ அல்லது தென் கிழக்கு  மூலையிலோ, வடகிழக்கு மூலையிலோ அமரக் கூடாது.
 
வடக்கு பார்த்த கடை:
வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும். காசாளர் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமர்ந்தால் பண பெட்டியை வலது புறம் அமைக்க  வேண்டும். வடக்கு பார்த்து அமர்ந்தால் பண பெட்டி அவரது இடது கை புறம் இருக்க வேண்டும். தென் மேற்கு மூலையிலும் அமரலாம். ஆனால் தென் கிழக்கு  அல்லது வடகிழக்கு மூலையில் அமரக் கூடாது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்