வாஸ்து - பூஜை அறையை எந்த திசையை நோக்கி வைப்பதை தவிர்க்கவேண்டும்...?

Webdunia
பூஜை அறை சதுரமான அமைப்பில் நான்கு திக்குகளும் சம அளவு கொண்டதாக இருப்பதால் அதற்குள் ஏற்படும் இயல்பான சூழல், மூளை வெளிப்படுத்தும் அலை இயக்கங்களுக்கு இசைவானதாக அமைகின்றன. அதனால், ஆன்மிக ரீதியான வழிபாடுகள் நல்ல விதமாக அமைவது அறியப்பட்டுள்ளது.

பூஜை அறை நல்ல சரியான இடத்தில் அமைய வேண்டும். குறிப்பாக, ஈசானிய பகுதி அதற்கு ஏற்றதாக சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில், பூமியின் மொத்த  சாய்மானமும் வடகிழக்காக உள்ளது. அதனால், அண்டவெளியிலிருந்து வரும் சக்தி அலைகள் சாய்மானமாக உள்ள ஈசானியம் என்ற வடகிழக்கு வழியாக  நுழைகின்றன. சக்திகளின் தொடக்க முனையாக உள்ள ஈசானியத்தை இறைவனின் இடமாக வாஸ்து குறிப்பிட்டுள்ளது.
 
வடகிழக்கு என்பது இறையருள் பெறுவதற்கான முதல் தரமான இடமாக கருதப்படுவதால், அந்த பகுதி முழுமையாக அடைபடாமல் பூஜையறை அமைக்கப்பட  வேண்டும்.
 
பூஜை அறைக்குள் காலை சூரியனின் ஒளி படிவது போன்ற அமைப்புகள் இருந்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். பொதுவாக, பூஜையறையின் மேற்கு அல்லது தெற்கு சுவரை சார்ந்தவாறு கடவுள் படங்கள் அல்லது சிலைகளை அமைத்து கொள்ளவேண்டும்.
 
பூஜை அறையில் தெற்கு நோக்கியவாறு சுவாமி படங்களை வைப்பதும், தெற்கு நோக்கியவாறு அமர்ந்து பூஜை செய்வதும் தவறான முறைகளாக வாஸ்துவில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்