செல் அரித்த வீடுகள் மற்றும் நிலங்களை வாங்கலாமா?

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (18:38 IST)
ஜோதிடப்படி பார்க்கும் போது, முடிந்தவரை அதையெல்லாம் தவிர்ப்பது நல்லது. வாங்கக் கூடாது. ஏனென்றால் கரையாண் இருக்கக் கூடிய இடத்தில் நாம் இருக்கக் கூடாது.

 
கரையாண் என்பது எல்லாவற்றையும் கரைக்கக் கூடியது. அழிவிற்குரிய அடையாளம் என்றும் சொல்வார்கள். பொதுவாக பார்த்தால் கரையாண்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவைகளை நாம்தான் தொந்தரவு செய்கிறோம். அவற்றின் இடத்திற்கு சென்று அவைகளை நாம் தொந்தரவு செய்யக் கூடாது.
 
கரையாண்கள் இருக்கும் இடத்தில் இருந்தால் புதுப்புது நோய்கள், தொற்று நோய்கள் எல்லாம் வரும். செல்வம் அழியும், பல விநோதமான நோய்கள், பாக்டீரியாக்கள் எல்லாம் உருவாகி நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும். அதனால்தான் கரையாண் அரித்த இடங்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. அதையும் மீறினால், காலமெல்லாம் மருந்து மாத்திரை என்று இருக்க நேரிடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்