வாஸ்து; மனையடி சாஸ்திரம் பற்றி தெரிந்து கொள்வோம்...!

Webdunia
மனையடி சாஸ்திரம் என்பது, ஒரு வீட்டின் நீள அகலத்தினை நிர்ணயிக்கும் ஒரு கணித முறையாகும். 

திருமண பொருத்தம் பார்த்து மனையாளை முடிவு செய்வது கொள்வது போல், குடியிருக்க போகும் மனைக்கும் மனையாளுக்கும் நட்சத்திர பொருத்தம் பார்க்கும் இம் முறையினை ஆயாதி பொருத்தம் என்பர்.
 
குடியிருக்க போகும் வீட்டிற்கும் குடும்ப தலைவிக்கும் இடையே உள்ள பொருத்தங்களை மனையடி சாஸ்திரத்தில் கூறியவாறு, பல கோணத்தில் ஆராய்ந்து கொடுக்கிறோம். அவையாவன ஆயம், வியயம், வாரம், திதி, ராசி, நட்சத்திரம், அம்சம், யோனி, பால், பூதம், பருவம்,  பர்யாயம்.
 
வாஸ்து பிரகாரம் பல பொதுவான முறைகள் இருந்தாலும், கட்டித்தின் நீளம், அகலம் என்று வரும்போது மனையடி சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள ஆயாதி கணிதம் வழியாக கிடைத்த பலனை ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்வதே நன்று.
 
எனவே, மனையாளின் பிறந்த நேரம், தேதி, இடம், மற்றும் வீட்டின் நீளம், அகலம் ஆகியவற்றை கொடுத்து, மனையடி சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள ஆயாதி கணித முறைப்படி, நீங்கள் குடியிருக்க திட்டமிடும் வீட்டிற்கும், உங்களுக்கும் என்ன பொருத்தம் என்பதனை அறிந்து  கொள்ளவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்