ஈசான்ய மூலை காலி இடமாக இருப்பதே நல்லதா....?

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2022 (17:36 IST)
வீட்டை வாஸ்து சாஸ்திரம் படி கட்டுவதற்கு இந்த 8 திசைகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ள கூடியதாக இருக்கிறது. இதில் வடக்கு திசைக்கும், கிழக்கு திசைக்கும் இடையில் இருக்கும் “வடகிழக்கு திசை” அல்லது “ஈசான்ய திசை” ஆகும்.


இந்திய புராணங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி, குபேரன் இருக்கும் வடக்கு திசை செல்வத்தையும், ஆதித்தன் இருக்கும் கிழக்கு திசை அறிவையும் குறிக்கின்றன.

வாஸ்து புருஷ மண்டலத்தில் எட்டுத் திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள் அட்டதிக்குப் பாலர்கள் எனப்படுகின்றார்கள். வடக்குத் திசைக்குப் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள்.

வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள். இந்து தத்துவங்களின்படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டிட மனையிலும் உள்ள இந்த உயிர்ப்புச் சக்தியையே வாஸ்து புருஷன் என வாஸ்து சாஸ்திரம் உருவகப்படுத்துகின்றது.

ஈசான்ய மூலை காலி இடமாக இருப்பதே நல்லது. அதையும் மீறி சிலர் வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கையின்மையாலும், அதை பற்றி முழுமையாக அறியாததனாலும் கட்டிடங்களை கட்டுவதால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு வாரிசுகள் உருவாகாமல் போகும் நிலை, பொருளாதார சீரழிவு போன்றவை ஏற்படுகிறது. துஷ்ட சக்திகள் வீட்டில் புகுந்து தொல்லைகளை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்