வாஸ்துபடி நமது வீட்டை எப்படி அமைக்கலாம்....

Webdunia
இன்றைய சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை.


 


பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரத்திற்கு சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளைகளை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர்மறை சக்திகூடும்.
 
* எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவியோடு திசைகளை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள். அது நமக்கு கஷ்டங்களையும் துரதிஷ்டத்தையும் தரும். ஏற்கனவே வீட்டின் கதவு இந்த திசையில் இருந்தால், இரண்டு அனுமான் கடவுளின் படம் இருக்கும் டைல்ஸ் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விடலாம்.
 
* கோவில் அல்லது பீடம் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால் பூஜை அறையை வட கிழக்கு திசையில் அமைத்திடுங்கள். அனைத்து நன்மைகளும் வந்து சேரும். மேலும் வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.
 
* படுக்கை அறை தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் தூங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக வட கிழக்கு திசையில் தூங்கக் கூடாது.
 
* குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதால், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.
 
* சமையலறை என்பது வளமையை குறிக்கும் இடமாகும். அதனால் இந்த இடம் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். வடகிழக்கு திசையில் சமையலறை அமைந்தால், வீட்டில் பணம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை வடகிழக்கு திசை யில் இது இருந்தால், மூன்று வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்க விடுங்கள்; ஆனால் அது அடுப்பை நோக்கி தொங்கக் கூடாது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்