குடும்ப தலைவிகளுக்கான சமையல் டிப்ஸ்...!

அலமாரிகளில் கற்பூரத்தை வைத்து பூச்சிகள் வராமல் துணிகளையும், புத்தகங்களையும் பாதுகாக்கலாம். இதை வாஷ் பேசின்களிலும்  போட்டு வைக்கலாம். துர்நாற்றம் வீசாது.
* பிரைட் ரைஸ் போன்ற அரிசி வகை உணவுகளை சமைக்கும்போது சில துளிகள் எண்ணெய் அல்லது எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால்  சாதம் ஒட்டாமல் மிருதுவாக வரும்.
 
* துணியில் ஏதேனும் டீ, காபி கரைகள் இருந்தால் வெந்நீரில் ஊறவைத்து துணிகளை துவைத்தால் அதில் இருக்கும் கரை நீங்கும்.
 
* வறுத்த வேர்க்கடலையை பொடியாக்கி பொரியல் கூட்டு சமைக்கும்போது அத்துடன் சேர்க்கலாம். இது சுவையை கூட்டும்.
 
* இட்லி மாவு புளிக்காமல் இருக்க ஒரு சிறய துண்டு வாழை இலையை அதில் போட்டு வைத்தால் புளிக்காது.


 
* கோழிக்கறி மிருதுவாக இருக்க சமைக்கும்போது 1/2 கிலோவிற்கு ஒரு முட்டை என்ற விகிதத்தில் முட்டையைச் சேர்த்துக் கொண்டால் கறி  மிருதுவாக இருக்கும்.
 
* பொரியல் செய்யும்போது அடிக்கடி தண்ணீர் தெளித்தால் அது பாத்திரத்தில் ஒட்டாமல் உதிரியாக இருக்கும்.
 
* வீட்டில் உள்ள எலக்ட்ரிக் ஸ்விட்ச்களில் அழுக்கு சேர்ந்து விட்டால் அதை எளிதில் அகற்றவேண்டும் என்றால் நெயில் பாலிஷ் ரிமூவரை  அதன் மேல் தடவி துடைத்தால் சுவிட்ச் அழுக்கில்லாமல் பளபளப்பாக இருக்கும்.
 
* காய்கறிகளை சமைக்கும்போது பாத்திரத்தை மூடி வைத்து சமைத்தால் சமையலும் சீக்கிரம் முடியும் அதில் இருக்கும் சத்துக்களும்  வெளியில் போகாமல் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்