தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: சின்னத்திரை நடிகை திடீர் கைது

புதன், 20 ஜூன் 2018 (16:46 IST)
கடந்த மாதம் நடைபெற்ற தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசார் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
 
போலீசாரின் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பல அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டதோடு, பலியானவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த மறுநாள் சின்னத்திரை நடிகை நிலானி போலீஸ் உடையில் இந்த சம்பவத்தை கண்டித்து பேசிய ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவில் பொதுமக்களை சுடுவதற்கு போலீசாருக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஆவேசமாக பேசியிருந்தார்
 
இந்த நிலையில் நிலானி மீது கடந்த 24ஆம் தேதி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் சற்றுமுன் அவர் குன்னூரில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக போலீஸ் உடையில் அவதூறு கருத்து கூறியதற்காக நடிகை நிலானி கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்