தல தளபதியின் குட்டி மீட்... வைரலாகும் வீடியோ!

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (18:34 IST)
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் விளையாடுகிறது. 
 
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நெருங்க உள்ள நிலையில் பயிற்சிக்காகவும் விளம்பர பட ஷூட்டிங் ஒன்றிற்காகவும் சென்னை வந்துள்ளார் தோனி. இதனிடையே தளபதி விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் ஷூட்டிங்கும், தோனி நடிக்கும் விளம்பர பட ஷூட்டிங்கும் இன்று சென்னையில் அருகருகே நடந்துள்ளது. அப்போது இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தப் போட்டோக்களை விஜய் மற்றும் தோனி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வைரலாக்க இன்றைய முக்கிய செய்தியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்