தளபதி விஜய் - தல தோனி சந்திப்பு: வைரலாகும் க்ளிக்ஸ்!!!
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (14:22 IST)
தோனியும் நடிகர் விஜய்யும் சென்னையில் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் விளையாடுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நெருங்க உள்ள நிலையில் பயிற்சிக்காகவும் விளம்பர பட ஷூட்டிங் ஒன்றிற்காகவும் சென்னை வந்துள்ளார் தோனி. இதனிடையே தோனியும் நடிகர் விஜய்யும் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் சந்தித்துக்கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.