அம்பேத்கர் பற்றி சர்ச்சை கருத்து: ஹர்திக் பாண்ட்யா கைது செய்யப்படுவாரா?

வியாழன், 22 மார்ச் 2018 (15:45 IST)
அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா மீது வழக்கு பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 
 
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா (24). இவர், கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய பதிவை ஒன்றை வெளியிட்டார், அதில் எந்த அம்பேத்கர் ஒரு குறுக்குத்தனமான அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவரா அல்லது இடஒதுக்கீடு எனும் நோயை நாடு முழுவதும் பரப்பியவரா என பதிவிட்டிருந்தார்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
இந்த சம்பவம் தொடர்பாக டி. ஆர் மேவால் என்பவர் ஹர்திக் பாண்ட்யா கருத்து அம்பேத்கரை அவமதிக்கும் விதத்தில் உள்ளதாக கூறி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.
 
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம்,  ஹர்திக் பாண்டியா மீது வழக்கு பதிவு செய்து போலீசாரை விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்