திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், ராஜேஸ்வரி(83). இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் தனது ஓய்வுத் தொகையை அலுவலகத்திற்கு சென்று நேரில் வாங்க முடியாததால் தனது தம்பி பத்மராஜ் கார்டியனாக நியமித்து, தம்பியிம் மூலம் ஓய்வுத் தொகையை பெற்று வந்தார்.
80 வயது தாண்டினால், பென்ஷன் தொகையில், 20 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும். கூடுதல் தொகையை மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதை பெற பத்மராஜ் செய்யாறு சார்நிலை கருவூல அதிகாரி ஷாகிதா(37)வை நாடியுள்ளார். அதற்கு அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனையடுத்து பத்மராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பத்மராஜிடம், 10 ஆயிரம் ரூபாயை, ஷாகிதா வாங்கிய போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஷாகிதாவை கைது செய்தனர்.