அதிபர் உரையின் போது தூக்கம்: மூத்த அதிகாரிக்கு மரண தண்டனை?

புதன், 25 ஏப்ரல் 2018 (12:31 IST)
வடகொரிய அதிபர் கிம் கடுமையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதை நிறுபிக்கும் வலையில், தற்போது மூத்த அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
சமீபத்தில் உலகை அச்சுறுத்தும் விதமாக நடத்தப்படும் அணு ஆயுத தாக்குத்லை நிறுத்தப்போவதாக அறிவித்தார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிஉஅ ராணுவ அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
 
ஆலோசனை கூட்டத்தின் போது அதிபர் கிம் உரையாற்றிக் கொண்டிருந்த 84 வயதான போது மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தலையை குனிந்தவாறு தூங்கியுள்ளார். 
 
இதனால், கோபமான கிம் இவருக்கு மரண தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் நாட்டின் துணை பிரதமர் முக்கிய கூட்டத்தில் தூங்கியதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால், சிலரோ வயது முதுமை காரணமாக சற்று அசதியில் இருந்து இருக்கலாம், அதனால் தலையை சாய்த்திருக்கலாம், அவரது கை விரல்கள் அசைந்துக்கொண்டிருந்துதான் இருந்தது என கூறி உள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்