தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? மக்கள் ஆய்வு மையம் கருத்துக்கணிப்பில் புதிய தகவல்

K.N.Vadivel
சனி, 14 மே 2016 (07:46 IST)
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்று மக்கள் ஆய்வு மையம் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
 

 
தமிழகத்தில் மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்? என மக்கள் ஆய்வு மையம் கருத்துக்கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.
 
இந்த கருத்துக்கணிப்பு குறித்து, அதன் தலைவர் டாக்டர் ராஜநாயகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக தலைவர் கருணாநிதி முதல்வர் ஆவதற்கு 41.1 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே போல, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு  31.7 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்-கு 10.1 சதவிகிதமும், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி-க்கு 6 சதவீதமும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 1.9 சதவிகிதமும் ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவை விட திமுக தலைவர் கருணாநிதிக்கு 9.4 சதவீதம் பேர் கூடுதலாக ஆதரவு தெரிவித்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்