கோவில்பட்டியில் மீண்டும் களம் இறங்கிய வைகோ

கே.என்.வடிவேல்
வெள்ளி, 13 மே 2016 (08:53 IST)
கோவில்பட்டி தொகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
 

 
கோவில்பட்டி தொகுதியில் தான் போட்டியிடுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். இதற்காகவே மக்கள்நலக்கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளிடம் இந்த தொகுதியை வாதாடிப்போராடிப் பெற்றார்.
 
மேலும், 20 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப் பேரவை தேர்தலில் வைகோ போட்டியிடுவதால், தொண்டர்களும் உற்சாகமாக தேர்தல் வேலைகளைத் தொடங்கினர். இந்த நிலையில், திமுக ஜாதி கலவரத்தை தூண்ட முயற்சி செய்வதாக கூறி போட்டியில் இருந்து விலகினார்.
 
ஆனால், இந்த முடிவை மறுசீலனை செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், தான் போட்டியிடமாட்டேன் என தனது முடிவில் வைகா உறுதியாக இருந்தார்.
 
இந்த நிலையில், கோவில்பட்டியில், மக்கள்நலக்கூட்டணி சார்பில் போட்டியிடும், மதிமுக வேட்பாளர் விநாயகா.இரமேஷை ஆதரித்து, பம்பரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். வைகோவின் பேச்சைக் கேட்க கொளுத்தும் வெயிலைக்கூட பாராமல் பொது மக்களும், கட்சி நிர்வாகிகளும் அவர் பேச்சை கேட்க நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் வைகோ நெகிழ்ந்து போனார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்