திமுக-வை கிடுகிடுக்கவைக்க ஜெயலலிதா எடுத்த பயங்கர ஆயுதம்

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (09:38 IST)
நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில், திமுகவை கிடுகிடுக்கவைக்க முதல்வர் ஜெயலலிதா இலங்கை விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.
 

 
தமிழக சட்ட மன்றத் தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக- அதிமுக இடையே கடும் மோதல் நிலவிவருகிறது. வெற்றி யாருக்கு என கடும் போட்டி நிலவிவருகிறது. இந்த நிலையில், இந்த தேர்தலில் திமுகவை கிடுகிடுக்கவைக்க ஜெயலலிதா அதிரடி வியூகம் வகுத்து இலங்கை விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.
 
நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கலந்து கொண்டு பேசுகையில், இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்ய திமுகவும் - காங்கிரஸ் கட்சியும்தான் காரணம். ஆனால், இனப்படுகொலையை கண்டித்து அதிமுக-வே சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுத்தோம்.
 
இந்தியாவில் இருந்த கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்து கருணாநிதியே. ஆனால், கச்சத்தீவை இப்போது மீட்பேன் என கருணாநிதி நாடம் ஆடுகின்றார். ஆனால், கச்சத்தீவை அதிமுக நிச்சயம் மீட்டுக் கொடுக்கும்.
 
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதும், கைது செய்யப்படும் போது திமுக ஆட்சியில் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அப்போது கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவித்தது அதிமுக ஆட்சியே. எனவே, அனைவருக்கும் பாதுகாப்பான ஆட்சி அதிமுக ஆட்சியே என்றார்.
 
ஏற்கனவே, கடந்த தேர்தலில் இலங்கை விவகாரம் பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்தால் திமுக-வும், காங்கிரஸ் கட்சியும் படுதோல்வி அடைந்தது. எனவே, தற்போது அந்த விவகாரத்தை ஜெயலலிதா கையில் எடுத்துள்ளார். இதை திமுக சற்றும் எதிர்பார்க்கவில்லையாம். இதனையடுத்து, ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுக்க திமுக தயாராகி வருகிறதாம்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
அடுத்த கட்டுரையில்