அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை: குடியாத்தத்தில் பரபரப்பு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (09:31 IST)
குடியாத்தம் அருகே  அதிமுக நிர்வாகி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.


 


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள கல்லபாடி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி, இவர் அப்பகுதியின் அதிமுக நிர்வாகியாக இருந்து வந்தார்.
 
இந்நிலையில், கிளை நிர்வாகிகளுக்கும் தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக அவருக்கு கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
 
இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்குப் முன்னர் குப்புசாமிக்கும், கிளை நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
 
இந்த மோதலின் போது, குப்புசாமி தாக்கப்பட்டார். இதனால் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.
 
இந்நிலையில், குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
அடுத்த கட்டுரையில்