தேனி மாவட்டம், போடி தொகுதியில், அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்மும், திமுக சார்பில் லட்சுமணனும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும், தேமுதிக, பாஜக போன்ற கட்சிகள் போட்டியிட்டாலும், இங்கு திமுக, அதிமுக இடையேதான் பலத்த போட்டி நிலவிவருகிறது.
இந்த நிலையில், அதிமுக ஆட்சி மீண்டும் ஏற்பட்டால், முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நம்பிக்கைகுரியவராக மீண்டும் வந்துவிடுவார் என்று அதிமுகவில் சில மாஜி மாண்புகள் சிலர் ஸ்மைல் செய்து, நாம் மீண்டும் நல்ல பதவிக்கு வரமுடியாது என்றும், முதல்வர் பதவி ஆசையால் சிலர் இது போன்ற காய்நகர்த்தலை செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ஓ.பி.எஸ். மீண்டும் வெற்றிபெறக்கூடாது என கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சில மாஜி மாண்புமிகுகள் ரகசிய கூட்டம் போட்டு, போடி தொகுதியில் கரன்ஸிகளை இறங்கிவிட்டுள்ளார்களாம்.