இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் 233 வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2016 (15:04 IST)
2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி உள்ளிட்ட இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் 233 வேட்பாளர்களும் இன்று ஒரே நாளில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.


 

 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் கோகுல இந்திரா, வைத்திலிங்கம் உட்பட அதிமுக வேட்பாளர்கள் 233 பேரும் இன்று  மதியம் 12.30 மணியளவில், அவரவர் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
 
தமிழக முதலமைச்சரம அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தான் போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த திங்கட்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
 
அதன்படி, போடி தொகுதியில் பன்னீர்செல்வம், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
 
ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிடும் வைத்திலிங்கம், சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் சின்னையா உள்ளிட்டோர் தங்கள் வேட்பு மனுவை தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தாக்கல் செய்தனர்.
 
இதேபோல, திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் சரத்குமார் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
 
அதிமுகவினர் 233 தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்