மங்காத்தாவையே தூக்கி சாப்பிடப்போகும் தளபதி 68.... வெறித்தனமா இருக்க போகுது!

புதன், 24 மே 2023 (14:10 IST)
தளபதி விஜய்யின் 68வது திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் இந்நிறுவனத்தின் 25 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, 'நான் சீரியஸ் படம் எடுத்தா ஓட மாட்டிங்குது. என்டர்டெயின்மென்ட்டா எடுத்தா தான் மக்கள் விரும்பி பாக்குறாங்க. நான் இப்படி தான் படம் எடுப்பேன்னு மக்கள் முடிவு செஞ்சுட்டாங்க. 
 
அதனால் இனி என்டர்டெயின்மென்ட் கொண்ட படங்களை தான் எடுப்பேன்' என கூறினார். அண்மையில் இவரது இயக்கத்தில் சீரியஸ் கான்செப்டில் வெளியான கஸ்டடி திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் வெங்கட் பிரபு நிச்சயம் தளபதி 68 படத்தை மங்காத்தா கான்செப்டில் எடுத்து அதைவிட பங்கமான வெற்றியை கொடுப்பார் என கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்