நடிகைக்கு கண்ணீர் அஞ்சலி - வைரல் போஸ்டர்

Webdunia
வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (10:01 IST)
சீரியல் நடிகை காயத்ரிக்கு ரசிகர்கள் தயார் செய்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்  சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘தெய்வமகள்’ சீரியலை பல பெண்களும், ஏன் ஆண்களுமே விரும்பு பார்க்கிறார்கள். காரணம், அந்த சீரியலில் வில்லியாக நடித்திருக்கும் காயத்ரியின் நடிப்புதான்.
 
பல வருடங்களாக ஒளிபரப்பாகும் இந்த நாடகத்தை காயத்ரிக்காகவே பலரும் பார்க்கின்றனர். இந்நிலையில், நேற்று ஒளிபரப்பான சீரியலில், காயத்ரியை பிரகாஷ் கொன்று விட்டதாக காட்சி ஒளிபரப்பப் பட்டது. எனவே, இந்த சீரியல் விரைவில் முடிவிற்கு வரும் எனத் தெரிகிறது.
 
இதையடுத்து, காயத்ரியின் ரசிகர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். அந்த போஸ்டரில் “பெண்ணாய் பிறந்து பிரகாஷ் குடும்பத்தை ஆட்டிப்படைத்து நம்பி, மந்த்ரா என்னும் பலரை கொன்று வீர மரணம் அடைந்த உங்களை கண்ணீருடன் வழி அனுப்புகிறோம். உங்கள் பிரிவில் வாடும் உள்ளங்கள்..” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்