காயத்ரி பேசுவது அதிர்ச்சியாக இருக்கிறது - உறவினர் கலா மாஸ்டர் பேட்டி

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (18:25 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் நடந்து கொள்ளும் விதம் தனக்கு அதிர்ச்சி அளிப்பாதாக அவரின் உறவினரான நடன இயக்குனர் கலா தெரிவித்துள்ளார்.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கும் முதல், தனது நடவடிக்கை மற்றும் பேச்சுகள் மூலம் பலரின் வெறுப்பை பெற்றிருப்பவர் காயத்ரி. சேரி பிஹேவியர் என அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் ‘ஹேர்’ மாதிரி என்ற வார்த்தையை அவர் அடிக்கடி உச்சரிக்கிறார். எனவே, இதுபற்றி நேற்று அவரிடம் கேள்வி எழுப்பிய கமல்ஹாசன், நீங்கள் அதிக கெட்ட வார்த்தை பயன்படுத்துகிறீர்கள்.. குறைத்துக்கொள்ளுங்கள் என அறிவுரை கூறினார். அது காயத்ரிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் இன்று வெளியான ஒரு புரோமோ வீடியோவில் “கமல் சார் என்னிடம் இப்படி அடிக்கடி அறிவுரை கூறுவது எனக்குப் பிடிக்கவில்லை. என்னை திருத்துவதற்கு எனது அம்மாவிற்கு மட்டுமே உரிமை இருக்கிறது” என காயத்ரி பேசியுள்ளார். 
 
இந்நிலையில் இதுபற்றி ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த  கலா மாஸ்டர் “காயத்ரி பேசுவதை கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது. சிறுவயதில் இருந்து பார்த்த காயத்ரியா இது என சந்தேகம் வருகிறது. அவளின் மற்றொரு முகத்தை பிக்பாஸ் வீட்டில் பார்க்கிறேன். நேற்று அவளிடம் கமல் கேட்டும், அப்படி பேசுவது தப்பில்லைன்னு சொல்றா. கமல் திட்டுவது அவளுக்கு பிடிக்கவில்லை எனில் அவர் அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும். பிக்பாஸ் வீட்டில் இருக்கக் கூடாது. அவள் என் வீட்டிற்கு வந்தால் கூட அவளிடம் நான் பேச மாட்டேன்”என கோபமாக பதிலளித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்