மீனம் - மார்கழி மாத பலன்கள் 2021

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (15:13 IST)
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - கிரக நிலை: தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் சுக், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
அனைவருக்காகவும் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும் . உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.
 
குடும்பத்தில் செயல்படாமல் முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்து விடும். உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவிக்கரம் முழு காரணமாக இருக்கும். பொருளாதாரத்தில் உயர்வு உண்டாகும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூல பலன்கள் உண்டாகும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவார்கள். 
 
தொழிலதிபர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். நல்ல வியாபார வாய்ப்புகள் பெற்று முன்னேற்றம் பெறுவார்கள். புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று பொருளாதார முன்னேற்றம் அடைவர். வியாபாரத்திற்கு புதிய வாகனம் வாங்குவீர்கள். 
 
உத்தியோகஸ்தர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான பணிவாய்ப்புகளைப் பெறுவார்கள். அரசு சுற்றுலா துறையில் பணிபுரியும் அதிகாரிகளும் தனியார் சுற்றுலா நிறுவன அதிகாரிகளும் பயனிகளுக்கு தேவையான வசதிகளை செய்துபொடுத்து பொருளாதார நிலை உயரப்பெறுவர்.
 
பெண்கள் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். பணியிடமாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது. பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். 
கலைத்துறையினர் தொழில் வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரித்து வீடு மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். கலைஞர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறுதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவர்.
 
அரசியல்வாதிகள் அனுகூல செயலபாட்டை தேவையான நேரத்தில் தடையின்றி பெறுவார்கள். பிறருக்கான நடத்தி தரவேண்டிய பணிகள் நடக்கும். ஆன்மீக எண்ணங்கள் செயல்பாடுகளாக மனதில் ஊற்றெடுப்பதால் தெய்வகாரியங்களை விருப்பத்துடன் செய்வீர்கள். 
 
மாணவர்கள் மெக்கானிக்கல் பயிற்சிபெறும் மாணவர்கள் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் எல்லா வகையிலும் உதவி புரிவார்கள். ஆயுள் பலம் பெறும். தந்தை மகன் உறவு சீராக இருக்கும். 
 
பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பெண்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். செயல்களில் வேகம் உண்டாகும்.
 
உத்திரட்டாதி:
இந்த மாதம் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை.
 
ரேவதி:
இந்த மாதம் திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும் தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. 
 
பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்